லியோ-னா சிங்கம்.. விஜய் எப்போமே சிங்கம் தான்.. மிஷ்கின் பேச்சு

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Update: 2023-07-03 17:56 GMT

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் மிஷ்கின் மேடையில் வரும் பொழுது ரசிகர்கள் லியோ லியோ என்று ஆரவாரம் செய்தனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது, லியோ-னா சிங்கம்.. விஜய் எப்போமே சிங்கம் தான். விஜய் ஒரு பெரிய குழந்தை. 21 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜய்யோட யூத் படத்துல வேலை செஞ்சேன். அப்போ எப்படி என்கிட்ட பேசினாரோ, இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அதே அன்போடு தான் பேசுறார் என்றார்.

மாவீரன் திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்