கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு
இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "க(ம)லை …. மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! (அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.) ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கிய போது, அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில், இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்.