கமல்ஹாசன்- எச்.வினோத் கூட்டணி உறுதி..? எகிறும் எதிர்பார்ப்பு

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்- 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2023-06-15 16:39 GMT

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. . இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதனிடையே 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கப்போவதாக சில தினங்களாகவே தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய விவசாயிகளை கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத், சென்னையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பேன் என்று கமல்ஹாசன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த சந்திப்பில் கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத் இருவரும் கலந்து கொண்டதால் கமல்ஹாசனின் 233-வது படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த படத்திற்காக இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனிடம் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்