யோகி பாபு கொடுத்த ஜெயிலர் பட அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Update: 2023-06-29 16:45 GMT

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படம் குறித்து நடிகர் யோகி பாபு சமீபத்திய் பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி சார் காம்பினேஷனில் இது வித்யாசமானப் படம். தர்பார் படத்தில் ரஜினி சாருடன் சில காமெடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஜெயிலரில் படம் முழுக்க காமெடி இருக்கும். ரஜினி சாரும் அந்த காமெடி காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்