மிக பெரிய ஒரு பரவசத்தை உருவாக்கும்.. இயக்குனர் மோகன் ஜி

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர்.

Update: 2022-09-13 17:00 GMT

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பகாசூரன்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் பாடல் குறித்து அப்டேட்டை இயக்குனர் மோகன்.ஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா என தொடங்கும் வரிகள் கொண்ட பாடல் விரைவில் வெளியாகும். மிக பெரிய ஒரு பரவசத்தை இந்த பாடலின் இசை உருவாக்கும். செல்வராகவன் சார் நடிப்பில், நடனத்தில் அசத்தி இருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்