லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்.. வைரலாகும் மிரியம்மா டிரைலர்
மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தை இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.;
அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கலகலப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலரை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 'லெஸ்பியன்னு சொல்லு கெத்தா இருக்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.