ஓர் அடி எடுத்தால்.. விடுதலை காற்று நம்மை வானில் ஏற்றுமே.. கவனம் ஈர்க்கும் மாவீரன் பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-07-09 18:06 GMT

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாவீரன்' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'வா வீரா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் பரத் சங்கர் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்