பெண்களை மதிப்பவரை திருமணம் செய்வேன்.. மனம் திறந்த அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர் அஞ்சலி. இவர் தன் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Update: 2023-06-11 17:46 GMT

ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ள அஞ்சலி இணையத்தொடரான பிட்ட கதா தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியாக நடித்து திடுக்கிட வைத்தார். தொடர்ந்து ஜான்ஸி, பால் போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

இந்நிலையில், நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :- பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் என்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாமும். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்