என் வேலையை நான் முடிச்சிட்டேன்.. 'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்..
சிம்பு தற்போது ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.;
சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கவுதம் கார்த்திக் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை புகைப்படங்களை வெளியிட்டு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.