எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'அவள் பெயர் ரஜ்னி' டீசர்

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-17 16:46 GMT

இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'அவள் பெயர் ரஜ்னி' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள் என எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்