மத்தகம் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது- அதர்வா
அதர்வா- மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மத்தகம்’. இந்த வெப்தொடர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில்.;
இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப்தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெப்தொடர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'மத்தகம்' வெப் தொடர் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் அதர்வா பேசியதாவது, "மத்தகம் இப்ப ரிலீஸாகுது, ஆனா இது 2018, 2019-ஆம் ஆண்டு ஆரம்பிச்சது. கவுதம் மேனன் சார் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக்காரணம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தான், அவங்களுக்கு ரொம்ப நன்றி.
பிரசாத் சார் இந்த கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில் பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்" என்று பேசினார்.