ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை சிவா இயக்குகிறார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.