பிறந்தநாள் பரிசாக டைட்டிலை வெளியிடும் தனுஷ் படக்குழு

தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

Update: 2023-07-20 17:36 GMT

 தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்