தனுஷ் படத்தின் புதிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்..

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.;

Update:2022-08-03 23:26 IST

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'திருசிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.

சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் உருவாக்கியுள்ள இந்த போஸ்டரில் "கேப்டன் மில்லர் விரைவில் வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்