இணையத்தை கலக்கும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்

தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது தனுஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2023-07-21 17:55 GMT

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. நடிகர் தனுஷ் சமீபத்தில் திருப்பதி கோவிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்