சந்தானத்துடன் இணைந்த தனுஷ் பட நடிகை

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷ் பட நடிகை இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2023-02-07 17:57 GMT

நடிகர் சந்தானம் தற்போது 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்