பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்

நடிகர் சல்மான்கானின் உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது.

Update: 2023-03-20 18:13 GMT

ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர்.

இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்