கவனம் ஈர்க்கும் 'தீராக்காதல்' டிரைலர்

நடிகர் ஜெய் தற்போது நடிக்கும் திரைப்படம் 'தீராக்காதல்'. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Update: 2023-05-11 17:43 GMT

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, 'தீராக் காதல்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞனின் கதையை வெளிப்படுத்துவது போல உருவாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும், இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்