அதிரும் பறையாய் இதயம் மாறுதே.. கவனம் ஈர்க்கும் அசோக் செல்வன் பட பாடல்
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'. தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.;
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'புளூ ஸ்டார்' படத்தின் முதல் பாடலான 'ரெயிலின் ஒலிகள்' பாடல் வெளியாகியுள்ளது. பிரதீப் குமார் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.