ராஜுவாக மாறிய அரவிந்த் சாமி.. வைரலாகும் போஸ்டர்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-03-05 17:36 GMT

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு இன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் கதாபாத்திரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் அரவிந்த சாமி 'ராஜு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டரை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்