அர்ஜூன் தாஸ்-இன் அடுத்த பட அறிவிப்பு
இந்த படத்தின் மூலம் பெரிய நடிகருடன் வேலை செய்ய இருக்கிறேன். அநீதி படத்திற்கு பிறகு கிடைத்த ஆதரவுக்கு நன்றி.;
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார். வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிராமாவாக உருவாகும் இந்த திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.
பூஜையை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது, ''இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய நடிகருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்."
"விஷால் வெங்கட் மதுரைக்கு வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி,'' என்று தெரிவித்தார்.