விமான நிலையத்தில் டாடா 50-வது நாள் வெற்றியை கொண்டாடிய அபர்ணா தாஸ் - க்யூட் வீடியோ

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘டாடா’. இப்படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.;

Update: 2023-04-03 16:43 GMT

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா திரைப்படம் இப்போதும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் 50 நாட்களை கடந்துள்ளதை நடிகை அபர்ணா தாஸ் விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்