'லத்தி' படத்திற்காக ஒரே 'ஷாட்'டில் விஷால் நடித்த உணர்ச்சிகரமான காட்சி

‘லத்தி' படத்திற்காக ஒரே ‘ஷாட்'டில் விஷால் நடித்த உணர்ச்சிகரமான காட்சி பற்றி டைரக்டர் வினோத்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-07-22 10:58 GMT

நடிகர்கள் ரமணா, நந்தா ஆகிய இருவரும் விஷாலை வைத்து, 'லத்தி' என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்தது. சண்டை காட்சிகளை படமாக்க 68 நாட்கள் ஆனது.

 

படத்துக்காக ஒரு உணர்ச்சிகரமான காட்சியை ஒரே 'ஷாட்'டில் படமாக்கி இருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் வினோத்குமார் கூறியதாவது:-

"கதைப்படி, விஷாலின் மகன் கடத்தப்படுகிறான். இதனால் விஷால் அதிர்ச்சியுடன் கலங்கி நிற்க வேண்டும். இந்த காட்சியை ஒரே 'ஷாட்'டில் படமாக்க திட்டமிட்டோம்.

 

இதற்காக 6 கேமராக்கள் வரவழைக்கப்பட்டன. குறிப்பிட்ட அந்த காட்சியில் உணர்ச்சிகரமாக நடிக்க விஷால் 3 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 'ஷாட் ரெடி' என்றதும் 6 கேமராக்களும் சுழலத் தொடங்கின. விஷால் ஒரே 'ஷாட்'டில் அந்த காட்சியில் நடித்து முடித்தார்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்