அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் தகனம்

அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2023-03-24 17:57 GMT

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது இறுதி ஊர்வலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

தந்தையின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அஜித்குமாரும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். தந்தை உடலை சுமந்து செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து நடிகர் அஜித் குமார் சென்றார். மின்மயானத்தை சென்றடைந்த சுப்பிரமணியத்தின் உடலை அஜித் தூக்கி சென்றார். பின்னர் அவரின் உடலுக்கு அஜித்தின் குடும்பத்தினர் சார்பில் குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுப்பிரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்