அடியாத்தி.. யுவன்-அனிருத் காம்போவில் வெளியான முதல் பாடல்

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரம்பொருள்.

Update: 2023-08-10 16:37 GMT

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்