வாயில் சுருட்டுடன் அட்லீ.. வைரலாகும் புகைப்படம்
அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.
இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் அட்லீ வாயில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.