கர்ம வினையை நம்பும் ராஷிகன்னா
தன் பார்வையில் ஆன்மிகம் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வது. வெற்றி தோல்வி எதுவானாலும் அது என் கர்மாவை பொறுத்துத்தான் கிடைக்கும் என்று ராஷிகன்னா தெரிவித்தார்,;
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தற்போது தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், ''நான் கர்ம வினை சித்தாந்தங்களை நம்புகிறேன். என் பார்வையில் ஆன்மிகம் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வது. வெற்றி தோல்வி எதுவானாலும் அது என் கர்மாவை பொறுத்துத்தான் கிடைக்கும். எனவே பெரிய வெற்றி கிடைத்தாலும் எனக்கு தலைக்கனம் இருக்காது. தோல்வி வந்தாலும் துவள மாட்டேன். எல்லாவற்றையும் சமமாக ஏற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை என்பது என் கருத்து.
பிரம்ம குமாரிகளின் ஆலோசனை முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கோபம் வந்தாலும் உடனே போய்விடும். எப்பொழுதும் அமைதியாக இருப்பேன். என் வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறேன். அதிகமாக உழைப்பது, என் முடிவுகளை நானே எடுத்துக்கொள்வது இதுதான் என் பலமும், பலவீனமும் கூட. ஒரு முடிவுக்கு வந்தால் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். நேரத்திற்கு நிறைய மதிப்பு கொடுக்கிறேன். சில முறை பிரச்சினைகள் கூட வரும். ஆனால் நான் நானாக இருப்பதை சந்தோஷமாக பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.