மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
நடிகர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.;
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.