மீண்டும் தந்தையானார் நடிகர் நகுல்
நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளனர்.;
சென்னை,
2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் அகிரா என்ற மகள் பிறந்தார். சமீபத்தில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளனர். இவர்கள் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.