படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் மம்முட்டி

நடிகர் மம்முட்டி ராகுல் சதாசிவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.;

Update: 2023-10-20 17:57 GMT

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைத்துள்ளார். ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'பிரமயுகம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 'பிரமயுகம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பு ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்