சுத்தமுள்ள நெஞ்சம்.. இணையத்தில் வைரலாகும் கருமேகங்கள் கலைகின்றன பட பாடல்

கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

Update: 2023-05-26 16:43 GMT

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இரண்டாம் பாடலான சுத்தமுள்ள நெஞ்சம் பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்