அரசியலில் களமிறங்கிய 'நாட்டு நாட்டு' பாடகர்
’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.;
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், 'நாட்டு நாட்டு' பாடல் பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கோஷமஹால் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.