வெறித்தனமான ரசிகன்

Update: 2023-04-21 05:15 GMT

சினிமா விருது வழங்கும் விழா ஒன்றில் 'ஜெய்பீம்' மணிகண்டன் பேசும்போது, "லோகேஷ் கனகராஜ் எப்போதும் 'நான் ஒரு தீவிரமான கமல் ரசிகன்' என சொல்லும் போது எனக்கு கோபம் வந்து, அவரை அடிக்கலாம் போல தோணும். ஏன்னா அந்த பட்டம் என்னுடையது. இதை நான் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றார். பின்னர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "ஒரு மணிகண்டன் இல்ல, இன்னும் 100 மணிகண்டன் வந்தாலும் சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்குப் போவேன். அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றார். அவ்வளவு வெறித்தனமான கமல் ரசிகரா லோகேஷ்? என திரையுலகினர் ஆச்சரியப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்