ரூ.4 கோடி சம்பளம் பெற்ற ராஷ்மிகா மந்தனா

`அனிமல்' படத்துக்காக ராஷ்மிகா மந்தனா ரூ.4 கோடி சம்பளமாக பெற்றதாக பேசுகின்றனர்.;

Update: 2023-10-20 04:12 GMT

'பான் இந்தியா' நடிகையாக உயர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் `வாரிசு' மற்றும் `சுல்தான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். `வாரிசு' படத்துக்காக ராஷ்மிகா ரூ.3 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல். தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள `அனிமல்' இந்தி படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்துக்காக அவர் ரூ.4 கோடி சம்பளமாக பெற்றதாக பேசுகின்றனர். குறுகிய காலத்திலேயே சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Tags:    

மேலும் செய்திகள்