பிரபல மலையாள தயாரிப்பாளர் ஜான் பால் காலமானார்
தேசிய மற்றும் பல சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல சினிமா திரைக்கதை எழுத்தாளர் ஜான்பால் காலமானார், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இரங்கல்.;
கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 71).
மலையாள பட தயாரிப்பாளரான இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டியின் பல படங்களுக்கு இவர் எழுதிய திரைக்கதை பெரிதும் பேசப்பட்டது.
ஜான் பால் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதமாக சிகிச்சையில் இருந்த ஜான்பால், நேற்று மதியம் திடீரென மரணம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திரை உலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஜான்பால் வங்கி அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமா உலகில் நுழைந்தார். அவருக்கு ஆயிஷா எலிசபெத் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திரையுலகில் நுழைந்த பின்னர் ஜான் பால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். குறிப்பாக சிறந்த இயக்குனருக்கான மாநில விருது, சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படத்திற்கான தேசிய விருது, சர்வதேச திரைப்பட விமர்சகர்களின் சிறப்பு ஜூரி விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.