கதாநாயகியுடன் ஜோடி சேர தயங்கும் ரஜினி.. வருத்தத்தில் ரசிகர்கள்
ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யாரு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.;
ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 169-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
40 வயதுக்கு குறைந்த நடிகைகளுடன் ஜோடி சேர ரஜினிகாந்த் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. யாரை ஜோடியாக நடிக்க வைக்கலாம்? என்று அவரிடமே கேட்கப்பட்டதாம். ‘‘ஐஸ்வர்யா ராயை கேட்டுப் பாருங்கள்’’ என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார். மற்ற கதாநாயகிகளுக்கு இவ்வளவு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை' என்று தயாரிப்பு நிறுவனம் தயங்குகிறதாம். ரஜினிகாந்தின் 169-வது படத்தின் கதாநாயகி வேட்டை தொடர்கிறது.
விரைவில் ரஜினி படத்தின் நாயகி யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.