‘மாயா’ பட இயக்குனருக்கு திருமணம்

நயன்தாரா நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ‘மாயா’ போன்ற சில படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.;

Update:2022-02-01 22:18 IST
2015-இல் நயன்தாரா நடித்த வெளியான ‘மாயா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன். அதன்பின் டாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கினார். இவர் 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘இறவாக்காலம்’. என்ற படத்தை இயக்கினார். பொருளாதார நெருக்கடியால் இந்தப் படம் தற்போது வரை வெளிவராமலே இருக்கிறது. இன்று வரை ரசிகர்கள் பலரும் 'இறவாக்காலம்' படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது நயன்தாரா நடிப்பில் ‘கனெக்ட்’ என்ற படத்தை அஸ்வின் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அஸ்வின் சரவணன் - காவ்யா ராம்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் நேற்று (ஜனவரி 30) புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இதனை அஸ்வின் சரவணன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் அவர் “பேனா மற்றும் பேப்பருடன் தொடங்கிய இந்த உறவு, கவிதையில் முடிந்திருக்கிறது. ஒவ்வொறு முறையும் என்னோடு சேர்ந்து புயலை கடக்கும் உனக்கு நன்றி. குறிப்பாக மூன்றாம் அலையின் போது உன்னோடு இப்படி செய்வதே ஒரு சாகசம் போலிருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

இவருக்கு அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்