மெலிந்து போன கீர்த்தி சுரேஷ்!
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இதுவரை 22 படங்களில் நடித்து இருக்கிறார்.
சில முன்னணி கதாநாயகிகளைப்போல் இவரும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். சிறிய இடைவேளைக்குப்பின், ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார்.
மிக குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து விட்டோம் என்ற பூரிப்பில் அவர் பருமனாகி விட்டார். அவருடைய உடல் எடை அதிகரித்து விட்டது. இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பட்டினி கிடந்தும், உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை குறைத்தார். இப்போது அவர் மெலிந்து போய் காணப்படுகிறார்!