மீண்டும் தமிழ் படத்தில் குட்டி ராதிகா!

குட்டி ராதிகா 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

Update: 2019-09-14 21:30 GMT
‘இயற்கை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான குட்டி ராதிகா, திருமணத்துக்குப்பின், நடிக்கவில்லை. கணவர், குழந்தை என குடும்ப தலைவி ஆகிவிட்டார். 13 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் படத்தின் பெயர், ‘தமயந்தி.’ இந்த படத்தை நவரசன் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:-

‘‘அருந்ததி, பாகமதி போல் இது ஒரு திகில் படம். இதில் நடிப்பதற்காக முதலில் அனுஷ்காவை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து இருந்தது. 2 புதிய படங்களை ஒப்புக்கொண்டிருந்ததன் காரணமாக, அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

அடுத்து குட்டி ராதிகாவை சந்தித்து கதை சொன்னேன். அவரும் ‘பிஸி’யாக இருந்தாலும், ‘தமயந்தி’ படத்தில் நடிக்க சம்மதித்தார்”.

மேலும் செய்திகள்