திறமை இல்லாவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது - நடிகை அதிதி ஷங்கர்
ஷங்கரின் மகள் என்பதால் அவருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கிறது. திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது, ரசிகர்கள் ஆதிரிக்க மாட்டார்கள் என சொல்லுகிறார் நடிகை அதிதி .;
கார்த்தி ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்திருப்பதன் மூலம், சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இந்தப் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். 'முதல் படத்திலேயே நல்ல பெயரை பெற்றுவிட்டார்' என்றும் புகழ்கிறார்கள்.
அதிதி, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இதுகுறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.