'ஹேப்பி நியூ இயர்' படத்தை நிராகரித்தது ஏன்?- வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்

அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'ஹேப்பி நியூ இயர்' .;

Update:2024-08-23 07:45 IST

சென்னை,

உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'ஹேப்பி நியூ இயர்' படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் என்பது தெரியுமா?. ஆம்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது, அபிஷேக்குக்கு ஜோடியாக இல்லாமல் படத்தில் தோன்றுவது மிகவும் வித்தியாசமாக உணர்ந்ததாக கூறினார். மேலும், படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்ததால், அபிஷேக் ஜோடி இல்லாத ஒரு பாத்திரத்தில் நடித்ததால், இது தனக்கும் அபிஷேக்குக்கும் அசவுகரியமாக இருந்திருக்கும் என்று கருதினார், இதனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறினார்.

இவ்வாறு பிளாக்பஸ்டர் படங்களில் இவர் நடிக்க மறுப்பது புதிதல்ல. இதற்கு முன்பு, 'முன்னாபாய் எம்பிபிஎஸ்', 'பூல் புலையா' மற்றும் 'கிரிஷ்' போன்ற ஹிட் படங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்