சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு 'விஸ்வம்பரா' படத்தின் போஸ்டர் வெளியீடு

சிரஞ்சீவியின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு 'விஸ்வம்பரா' படத்தின் ப்ரீ லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2024-08-22 12:12 IST

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. 1970-களில் கதாநாயகனாக அறிமுகமாகி இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நாயகனாகவே நடித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில்  நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை சிறப்பிக்கும் வகையில் 'விஸ்வம்பரா' படக்குழுவினர் இந்த படத்தின் ப்ரீ லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் 'உலகை இருள் சூழ்ந்தால், சமநிலையை மீட்டெடுக்க பெரிய அளவிலான நட்சத்திரம் எழும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்