விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
சென்னை,
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் .பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் உள்பட பலரும் தங்களது சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.