விக்ரம் 10 நாட்களில் இவ்வளவு வசூலா...! புதிய சாதனை, கலக்கும் கமல்ஹாசன்

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.;

Update: 2022-06-13 06:05 GMT

சென்னை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1986-ல் வெளிவந்த 'விக்ரம் திரைப்படம் பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது. தற்போது 2022-ல் வெளியாகியுள்ள புதிய 'விக்ரம்' திரைப்படம் போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டதாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார்.

பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் சூர்யா வந்தாலும் தன் முத்திரையை அழுத்தமாக பதித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது. வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் ஆனால், படத்தின் ஹிந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்திலும் 130 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது விக்ரம். சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. கேரளாவில் 30 கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ளது.

கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் அதிக அளவுக்கு விக்ரம் படம் வசூலை அள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகம் முழுவதும் விக்ரம்

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விக்ரம்அக்‌ஷய் குமார் நடித்த சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் அதிவி சேஷ் நடித்த மேஜர் படங்களின் வசூலை முறியடித்துள்ளது.

விக்ரம் அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் $2.5 மில்லியனை கடந்துள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலா தனது டுவிட்டரில் விக்ரமின் வசூல் குறித்து பகிர்ந்து அதை உறுதிப்படுத்தினார்.

விக்ரம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் படைத்துள்ள வசூல் சாதனை குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விக்ரம் தற்போது வரை தெலுங்கில் மட்டும் ரூ. 25+ கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம். இதுவரை அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களில் விக்ரம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.  


விக்ரம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி தற்போது விக்ரம் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் படைத்துள்ள வசூல் சாதனை குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விக்ரம் தற்போது வரை தெலுங்கில் மட்டும் ரூ. 25+ கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம். இதுவரை அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களில் விக்ரம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்