விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படம் ரீ-ரிலீஸ்
விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.;
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50-வது படமான இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அழுத்தமான கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இவர் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை 2' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலுள்ள 400 திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.
தெலுங்கில் இந்த வாரம் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் இந்த படத்தின் ரீ ரிலீஸ்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் தெலுங்கு திரை உலக ரசிகர்களுக்கும் பிரபலமானவர்கள் என்பதால் தற்போது இந்த படம் ரீ-ரிலீஸிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழிலும் விரைவில் இந்த படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.