50-வது படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி...!
விஜய்சேதுபதி நடிக்கும் 50-வது படத்துக்கு ‘மஹாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது.;
விஜய்சேதுபதி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் நாயகன் ஆகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதுவரை 49 படங்களை முடித்துள்ள விஜய்சேதுபதி, தற்போது 50-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'மஹாராஜா' என்று பெயர் வைத்துள்ளனர். நிதிலன் டைரக்டு செய்கிறார். நட்டி, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுதன், ஜெகதீஸ் தயாரித்துள்ளனர். விஜய்சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
பட நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி நெகிழ்ச்சியோடு பேசும்போது, "என்னை இந்த உயரத்துக்கு கொண்டு வந்த இயக்குனர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. பொறுமையும், அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும்.
ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும், அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. படத்தின் இயக்குனர் நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது'' என்றார்.