விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார் - சரத்குமார் பேச்சு

'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது

Update: 2022-12-24 15:47 GMT

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் படையெடுத்துகலந்து கொண்டுள்ள நிலையில் , திரையுலக பிரபலங்கள், கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது ;

விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூர்ய வம்சம் படத்தின் 175வது நாள் விழாவில் நான் சொன்னேன். தற்போது அது நடந்து விட்டது. விஜய் தான் சூப்பர் ஸ்டார் . நான் அப்போது இதை சொன்ன பொது கலைஞர் கருணாநிதி ஆச்சரியப்பட்டார். என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்