விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா இருவரும் ஒரே இடத்தில் புத்தாண்டை ரகசியமாக கொண்டாடினார்களா?
புத்தாண்டில் திரையுலக நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்படுகிறது. தங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை என்று இருவரும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் இருவரையும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. அவர் கள் அப்படி கூறிகொண்டாலும் அவர்கள் செய்து வரும் சில செயல்பாடுகளும் சில சந்தேகங்களை எழுப்புகின்றன.
புத்தாண்டில் திரையுலக நட்சத்திரங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய தேவரகொண்டாவும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். புத்தாண்டு, புதிய மாதம், புதிய நாள் என்று பார்வையாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். ஆனால் இங்கே ஒரு திருப்பம். விஜய் பதிவிட்ட சில நிமிடங்களில் ராஷ்மிகா மந்தனாவும் பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் புத்தாண்டு பதிவுக்கு பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 'ஹலோ 2023' என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
விஜய்யும் ராஷ்மிகாவும் இப்போது எங்கே? அவர்கள் இருக்கும் இடம் குறித்து தெளிவுபடுத்தாததற்கு காரணம் என்ன..? கொண்டாட்ட புகைப்படங்களும் இல்லை. இதனால் ரசிகர்களின் சந்தேகம் வலுத்தது.
அதைவிட முக்கியமாக, விஜய் தேவரகொண்டாவின் புகைப்படம், கடற்கரை ரிசார்ட் அருகே உள்ள நீச்சல் குளத்தில் இருப்பது போன்றது. ராஷ்மிகா மந்தனாவும் ரிசார்ட்டின் குளத்தில் இளைபாருகிறார். அதனால்தான் இருவரும் ஒரே இடத்தில் இருப்பதாக சிலர் உறுதியாகக் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல.. கடலையும் நீச்சல் குளங்களையும் பார்த்து.. மாலத்தீவில் ஜாலியாக வாழ்கிறார்கள் என்பது பலரது முடிவு. இது குறித்து கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
விஜய் தேவரகொண்டா வும் ராஷ்மிகாவும் ஒன்றாக கொண்டாடினார்களா என்பதுதான் அனைவரின் சந்தேகம்.இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் மாலத்தீவு சென்றவர் அப்போது எடுக்கபட்ட புகைப்படங்களை அவர்கள் பதிவிட்டார்கள என்ற சந்தேகமும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது