பாலியல் வழக்கு: வில்லன் நடிகரை கைது செய்ய தடை நீடிப்பு

விஜய்பாபுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதுவரை விஜய் பாபுவை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

Update: 2022-06-09 09:25 GMT

மலையாள வில்லன் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மயக்க மருந்து கொடுத்து பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை சில வாரங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தது பரபரப்பானது.

விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் துபாய் தப்பி சென்று விட்டார். முன் ஜாமீன்கோரி கேரள உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கோர்ட்டு கடந்த 2-ந் தேதி வரை விஜய்பாபுவை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததால் துபாயில் இருந்து விமானத்தில் திரும்பி கொச்சி போலீசில் ஆஜரானார்.

அப்போது நடிகையின் சம்மதத்துடன் இருவரும் உறவு கொண்டோம் என்று வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் விஜய்பாபுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதுவரை விஜய் பாபுவை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்து உள்ளது. ஜாமீன் நிராகரிக்கப்பட்டால் விஜய் பாபுவை உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்