விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

Update: 2022-08-13 22:10 GMT

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் 'கொலை' படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 'நீர்க்குமிழோ' என்ற இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்